Print this page

பாராட்டுதலும் வாழ்த்தும். குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.04.1931 

Rate this item
(0 votes)

சென்ற வாரம் நாம் திருச்சி முனிசியல் சடையார் மக்களுக்குப் புதிதாக சில லைசென்சு வரிகள் விதிக்கப்பட்டதில் பொது ஜனங்களுக்குள் இருந்த அதிருப்தியைக் குறிப்பிட்டுவிட்டு. எதிரிகள் பரிகாசம் செய்வார்களே என்று சிறிதும் பயப்படாமல் முனிசிபல் சபையார் தைரியமாய் முன்வந்துப் புதிய வரிகளை குறைத்துவிடவேண்டும் என்று தெரிவித்துக்கொண்டோம் அதுபோலவே திருச்சி முனிசிபல் கவுன்சிலர் அவர்களும், சேர்மென் அவர்களும் தைரியமாய் முன்வந்து அதிகமாகப் போட்ட வரிகளைக் குறைத்து விட்டதாக சேதி எட்டி இருக்கின்றது. இது அவர்களுக்கு மிக்க பெருமையும் கௌரவமுமான காரியமாகும். இதற்காகத் திருச்சி பொது ஜனங்களைப் பாராட்டுவதுடன் கவுன்சிலர்களையும், சேர்மென் அவர்களையும் நாம் மனமார வாழ்த்துகின்றோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.04.1931

Read 64 times